க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இஸ்லாமிய நாகரிகத்தை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் புதிய பாடத்திட்ட ஒழுங்கில் சிறந்த புள்ளிகளைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில் 50 பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் 100 எனினும், புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள சிறந்த வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. இது இலகுவான ஒரு காரியமல்ல. முழுப் பாடத்திட்டத்தையும் கருத்திற் கொண்டே இவ்வினாப் பத்திரம் தயாரிக்கப்படுகிறது. பாட அலகுகளில் உள்ளடக்கப்படும் முக்கிய நிகழ்வுகள், அறிஞர்கள், கலைகள், நூல்கள், குர்ஆன்-ஹதீஸ் வசனங்கள் மற்றும் வரலாறுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்வினாப் பத்திரம் காணப்படுகிறது.
பாட அலகுகளிலுள்ள தகவல்களை ஆழமாகத் தெரிந்து கொள்ளாதோர் இவ்வினாப் பத்திரத்தில் குறைவான புள்ளிகளையே பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இரண்டாம் வினாப் பத்திரத்திற்கு எவ்வளவு சிறப்பாக விடையெழுதிய போதிலும் A, B சித்திகளைப் பெறுவது சாத்தியமற்றதாகி விடுகிறது. முதலாம் வினாப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும் 50 வினாக்களில் 40 வினாக்களுக்கேனும் சரியான விடைகளை எழுதினால் A, B சித்திகளை அடைவது சாத்தியப்படலாம்.
க.பொ.த. உயர்தரப் பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ள இரண்டு வருடகால அவகாசம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விடைப்பட்ட காலப் பிரிவில் மாணவர்கள் தமது பாடசாலைகளில் பல பரீட்சைகளுக்குத் தோற்றுவர். இதன் மூலம் பொதுப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றுவதற்கான தகுதி அவர்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது.
இந்நூல், கடந்த ஐந்து வருட கால வினாப் பத்திரங்களை (2019-2023/24) உள்ளடக்கியுள்ளது. அத்துடன், மேலதிகமாக மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கான வினாக்களும் விடைகளும் தரப்பட்டுள்ளன என்பதையும் கருத்திற் கொள்க.
LKR 600.00
Out of stock
Out of stock
© 2025 Mybooks.lk | All Rights Reserved | Powered by Inzra Digital
Reviews
There are no reviews yet.